ஏன் சுர்ஜித் உடலை காட்டவில்லை? விளக்கமளித்த வருவாய் துறை ஆணையர்!

04 November 2019 அரசியல்
savesurjith.jpg

ஏன் சுர்ஜித்தின் உடலைக் காட்டவில்லை என்றக் கேள்விக்கு, வருவாய் துறை ஆணையர் திரு. ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

திருச்சியின் மணப்பாறைப் பகுதியில் உள்ள நடுகாட்டுப் பகுதியில், கடந்த 25ம் தேதி அன்று, மாலை 5.40 மணியளவில் இரண்டு வயது சிறுவனான சுர்ஜித், சொந்தமாக இடப்பட்டு இருந்து ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். தொடர்ந்த, 80 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அவனுடைய உடல் மீட்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சுர்ஜித்தின் உடலை, அரசாங்கம் மீட்க வில்லை எனவும், சுர்ஜித்தின் உடலில் ஒரு சிலப் பாகங்களை மட்டுமே மீட்டது எனவும் சமூக வலைதளங்களிலும், வாட் ஆப்களிலும் தகவல்கள் பரவின.

இதற்கு விளக்கமளிக்கும் விதத்தில் வருவாய் துறை ஆணையர் பேசினார். அவர் பேசுகையில், கும்பகோணம் தீ விபத்தில், பல குழந்தைகள் இறந்தனர். அவர்களின் உடலினை காட்டியது குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால், மத்திய அரசு ஒரு சில வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது.

அதன்படியே, அனைத்து மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம். சுர்ஜித் விஷயத்திலும் விதிமுறைகளைப் பின்பற்றியே நாம் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோம். ஒருவேளை சுர்ஜித் உடலைக் காண்பித்திருந்தால், நம் மீது வழக்குத் தொடர வாய்ப்புகள் உள்ளன. மனிதனால் எவ்வளவு இயலுமோ, அந்த அளவிற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

HOT NEWS