சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்தத் திரைப்படத்தின் இறுதிப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகள் தற்பொழுது முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தினை சிக்யா நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளன. இந்தப் படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தின் இசைவெளியீடானது, விமானநிலையத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் படம், டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தின் அதிபர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இவர் தான், இந்தியாவில் மலிவு விலையில் விமான சேவையைத் தொடங்கி வைத்தார். அவரைக் கௌரவிக்கும் பொருட்டு, நூறு ஏழை அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய, படக்குழு முடிவு செய்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியினால், சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தப் படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றியினைப் பெற்றுத் தரும் என, சினிமா விமர்சகர்கள் நம்புகின்றனர்.