சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்றப் பெண், பிளக்ஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை முன்னிட்டு, பலரும் தங்களுக்கு பிளக்ஸ் வைக்கக் கூடாது எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, எனதுப் படங்களுக்கு பிளக்ஸ் வைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நாம் இப்பொழுதும், எப்பொழுதும் இது குறித்துப் பேசுகிறோம். இருப்பினும், இப்பொழுது பேசுவது அவசியமானது. இப்படியொரு சம்பவம் நிகழ்ந்த பிறகு, இதனைப் பற்றி பேசாமல் இருக்கக் கூடாது. தமிழகத்தில் எங்கும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைக்கக் கூடாது. அதற்குப் பதிலாக பள்ளிக் கூடங்களுக்கு பல தொண்டுகள் செய்யலாம். இரத்தத் தானம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் பிரயோஜனமானவை.
இதனை திரும்பவும் நீங்கள் செய்யமாட்டீர்கள் என நம்புகிறேன். அரசாங்கப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அவைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவோம். அதுவே வளர்ச்சிக்கு நல்லது எனக் குறிப்பிட்டுள்ளார்.