தனக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார் நடிகர் சூர்யா.
இதுகுறித்து அவர் தன்னுடைய தொண்டு நிறுவனமான, அகரம் பவுண்டேஷன் மூலம், வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக் கொள்கைத் தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மய்யம் அமைப்பிற்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள். திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு, முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு, கல்விப் பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது.
தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள், இப்படிக்கு சூர்யா என்ற அறிக்கை வெளியிட்டுள்ளார்.