இன்று, உலகம் முழுவதும், தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம் வெளியாக உள்ளது.
2017ம் ஆண்டு திரைப்படமாக்கப்பட்ட என்னை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம், திரைக்கு வராமலேயே இரண்டு ஆண்டிற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது. கடன் தொல்லையின் காரணமாக, இப்படத்தினை தயாரித்து, இயக்கிய இயக்குநர் கௌதம் மேனனால் இப்படத்தினை குறித்த நேரத்தில் படத்தினை வெளியிட இயலவில்லை. பலமுறை, இத்திரைப்படம் வெளியாகும் என தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில், படம் வெளியாகாது என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கௌதம் வாசுதேவ் மேனனின் நிலையை அறிந்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷ், கௌதம் மேனனைத் தொடர்பு கொண்டு, இந்தப் படத்தினை தான் வாங்கிக் கொள்வதாகவும், அதற்குப் பதிலாக படம் செய்து தரும் படியும் கோரியிருக்கின்றார். அதற்கு, கௌதம் மேனன் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, வாசுதேவ் மேனனிடம் இருந்து இப்படத்தினை வாங்கி இன்று வெளியிட்டார்.
இப்படத்திற்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ள சுசீந்திரன், enpt-எனக்கு மிகவும் பிடித்த கௌதம் மேனன் சார் இயக்கத்தில், தனுஷ் சார் மற்றும் சசிகுமார் அண்ணன் இயக்கத்தில் இன்று வெளிவரும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என கடிதம் எழுதியுள்ளார்.