சுஷாந்த் சிங்கினை தொடர்ச்சியாக தன்னுடைய நான்கு படங்களில் இருந்து நீக்கியதாக, பிரபல ஹிந்திப் பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14ம் தேதி அன்று, தன்னுடைய மும்பையில் உள்ள வீட்டில் நடிகர் சுஷாந்த் சிங், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால், பாலிவுட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதில், சல்மான் கான் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதில் ஹிந்திப் படத் தயாரிப்பாளரும், ராம் லீலா, பத்மாவத், பாஜிரோ மஸ்தானி உள்ளிட்டப் படங்களை தயாரித்து இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியிடம், போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை செய்தனர். அப்பொழுது அவர் திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளார். அவர் போலீசிடம் கூறுகையில், நான் அவரை ஒரு படத்தில் இருந்து இல்லை. நான்கு படங்களில் இருந்து நீக்கினேன். அதுவும் தொடர்ச்சியாக நீக்கியுள்ளேன். சுஷாந்த் சிங்கிடம், எனக்குத் தேவையான கால்ஷீட்கள் இல்லை.
எனவே, அவ்வாறு செய்தேன். சுஷாந்த் பலப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதனால், அவரால் என்னுடையப் படங்களில் நடிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.