சுஷாந்துடன் ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்தேன்! காதலி வாக்குமூலம்!

31 July 2020 சினிமா
sushantssr.jpg

நடிகர் சுஷராந்துடன் ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்ததாக, அவரின் முன்னாள் காதலி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அன்று, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தன்னுடைய வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட் உலகில், பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, போலீசார் தற்பொழுது விசாரித்து வருகின்றது. இது முன்னுக்குப் பின் முரணானத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

மும்பை மாநகரப் போலீசாரும், புனே நகரப் போலீசாரும் சுஷாந்த் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், புனே நகரில் பதியப்பட்டுள்ள வழக்கினையும், மும்பை நகருக்கு மாற்ற வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தற்பொழுது உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. அவர் சமர்பித்துள்ள மனுவில், தானும், சுஷாந்த் சிங்கும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, ஒன்றாக வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 8ம் தேதி தான், அவரை விட்டுப் பிரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்த் சிங் ஜூன் 14ம் தேதி தான், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், மும்பைப் போலீசார் பலத் திடுக்கிடும் உண்மைகளைக் கண்டறிந்து உள்ளனர். அதில், ரியாவின் குடும்பத்தார், சுஷாந்தின் பணத்தினை அதிகளவில் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரியாவின் அண்ணன் செலவுகள் அனைத்தும், ரியா மூலமாக சுஷாந்தே பார்த்து இருக்கின்றார். சுஷாந்தின் வங்கிக் கணக்கினைப் பயன்படுத்தி, பல லட்ச ரூபாயினை ரியா தன்னுடைய குடும்பத்திற்காகப் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

HOT NEWS