சுஷாந்த் சிங்கிற்கு பைப்போலார் டிஸ்ஸார்டர் நோய் இருந்துள்ளது என, காவல்துறையானது அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 9ம் தேதி அன்று, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தன்னுடைய வீட்டில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இதனால், பாலிவுட்டில் மாபெரும் பரபரப்பு ஏற்பட்டது. சல்மான் கான் உள்ளிட்டப் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த சூழ்நிலையில், சுஷாந்தின் முன்னாள் காதலி ரியாவினை போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் மனநிலைப் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் விரக்தியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளார் எனவும் மருத்துவர்கள் பேசி வருகின்றனர்.
இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்படி விசாரிக்கையில், தன்னுடைய கணினியில் சுஷாந்த் முதலில் தன்னுடைய முன்னாள் மேலாளர் திஷா சலியானின் பெயரினையும், பின்னர் தன்னுடையப் பெயரையும் கூகுளில் தேடி உள்ளார். தொடர்ந்துப் பல முறை கூகுளில் தன்னுடையப் பெயரினைத் தேடியுள்ளார்.
இதனால், அவருக்கு மனநிலைப் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றுக் கூறுகின்றனர். தனக்கும், தன்னுடைய முன்னாள் மேலாளருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூகுளில் வருகின்றதா என, தேடியுள்ளார். பின்னர், வீட்டில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார். இதிலிருந்து அவர், பைப்போலார் டிஸ்சார்டர் (3 படத்தில் தனுசிற்கு இருக்குமே) அந்த நோய் இருந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கலாம் என்றுக் கருதுகின்றது போலீஸ்.