இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், சினிமா சூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளன. திரையறங்குகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன.
இது எப்படி என யாருக்கும் தெரியாது. இது குறித்து, பாஜக உறுப்பினரும் முன்னணி நடிகருமான எஸ்வி சேகர் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் எழுப்பியுள்ள கேள்வியில், 19க்கு பிறகு ஷூட்டிங் நிறுத்தப்பட்ட பிறகு அத்தனை சானல்களிலும் ஒரு எபிசோட் கூட தடைப்படாமல் சீரியல் வருகிறது , முன்பே எடுக்கப்பட்டதா, ஊரடங்கு தடை மீறி எடுக்கிரார்களா? அல்லது ஊடகம் எனச் சொல்லி எடுக்கப்படுகிறதா, தேவை வெள்ளை அறிக்கை. There is a difference bet entertainment & NEWS எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
19க்கு பிறகு ஷூட்டிங் நிறுத்தப்பட்ட பிறகு அத்தனை சானல்களிலும் ஒரு எபிசோட் கூட தடைப்படாமல் சீரியல் வருகிறது ⁉️முன்பே எடுக்கப்பட்டதா⁉️ஊரடங்கு தடை மீறி எடுக்கிரார்களா⁉️ அல்லது ஊடகம் எனச்சொல்லி எடுக்கப்படுகிறதா⁉️தேவை வெள்ளை அறிக்கை. There is a difference bet entertainment & NEWS.
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) March 27, 2020