நடிகரும், தமிழக பாஜக உறுப்பினருமான எஸ்வி சேகர் மீது, புதிதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தேசியக் கொடியினைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளதாக நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ் வி சேகர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அவர் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் வெளியிட்ட வீடியோவில், இந்தியத் தேசியக் கொடியில் உள்ள காவி நிறத்தினையும், இந்து மதத்தினை இணைத்து பேசியிருந்தார்.
இது பலரின் மத்தியிலும் சர்ச்சையினையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையகம் என்பது, அறிவாலயமா அல்லது வேறு எதுவுமா என்பது பற்றி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும், அதிமுகவின் கொடி மற்றும் கட்சிப் பற்றியும் அவர் பேசியிருந்தார்.
இவர் பேச்சிற்கு அதிமுகவினர் பலரும், தங்களுடையக் கண்டனத்தினைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியினைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இணையத்தின் மூலம், தற்பொழுது புகார் அளித்துள்ளார். அவருடையப் புகாரில், தேசியக் கொடியினை அவமதிதத்தன் காரணமாகவும், முதல்வரை அவதூறாகப் பேசியதன் காரணமாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.