பணம் கேட்ட மாணவியின் தரப்பு கைது! அதிகாரிகள் அதிரடி!

26 September 2019 அரசியல்
chinmayanand.jpg

உத்திரப் பிரதேசத்தில் உள்ள சாமியார் சின்மயாநந்தா, அவருடைய சட்டக் கல்லூரியில் படித்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரச்சனை எழுந்தது. இந்நிலையில், அந்த மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், அவருடைய ஆசிரமம், கல்லூரி, வீடு என அனைத்து இடங்களிலும், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், சுவாமி சின்மயாநந்தா 14 நாட்கள், போலீசில் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனிடையே, உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால், அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்பொழுது, அந்த சாமியார் தரப்பில் இருந்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், சுமார் 5 கோடி ரூபாய் கேட்டு அவரை மிரட்டியதாக, அப்பெண்ணின் தரப்பினர் மீது புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று முன் தினம், அப்பெண் மற்றும் அப்பெண் தரப்பினர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தினை நாடியிருந்தனர். பணம் கேட்டு மிரட்டியதாக அந்தப் பெண் உட்பட, நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

நேற்று ஷாஜகான்பூரில் தங்கியிருக்கும் அந்த மாணவி உட்பட, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். சாமியாரை மிரட்டுவதற்கு பயன்படுத்திய மொபைல் போனும் பரிமுதல் செய்யப்பட்டன. அந்தப் பெண்ணிற்கு ஆதரவாக, சாமியாரை மிரட்டியது தொடர்பாக மூன்று பேர் தாங்கள் செய்ததை ஒப்புக் கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS