தங்க கடத்தல் விவகாரம்! முதல்வர் அலுவலகத்திற்கு ஏற்கனவே தெரியும்! நீதிமன்றத்தில் தகவல்!

12 November 2020 அரசியல்
swapnasuresh.jpg

கேரளாவினை உலுக்கியுள்ள தங்கக் கடத்தில் விவகாரமானது, முதல்வர் அலுவலகத்திற்குத் தெரிந்தே தான் நடந்துள்ளது என, அமலாக்கத்துறை கூறியுள்ளது.

கேராவினை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரிய தலைவலியாக அமைந்திருப்பது, ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தல் விவகாரம். இதில், கேரளாவின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கருக்கும் தொடர்பு இருந்ததாக கூறி, அவரிடமும் அமலாக்கத்துறையும், போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் பல புதிய நபர்களின் பெயர்களும் நாளுக்கு நாள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றது.

இந்தக் கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராய் விஜயனின் பெயரும் அடிபட்ட வண்ணம் உள்ளது. அவருக்கும், இந்தத் தங்கக் கடத்தல் வழக்கிற்கும் தொடர்பு இருக்குமா என பலரும் வியூகித்து வருகின்றனர். இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்த அமலாக்கத்துறையானது, திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளது. அதில், இந்தக் கடத்தில் முதலமைச்சர் அலுவலகத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS