யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்? கேரளாவினை அதிர வைக்கும் தங்கக் கடத்தல் ராணி!

12 July 2020 அரசியல்
swapnasuresh.jpg

கேரளாவினை அதிர வைத்துள்ள தங்கம் கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

நேற்று குடும்பத்துடன் பெங்களூருவில் தங்கியிருந்த ஸ்வப்னா சுரேஷை, தேசிய விசாரணை முகமையான என்ஐஏ கைது செய்தது. ஐக்கிய அரசு அமீரகத் தூதரகத்தினைப் பயன்படுத்தி, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதை அடுத்து, அதிரடியாகக் கைது செய்யப்பட்டது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தினைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதில் 4 பேர் ஈடுபட்டதாக இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த ஜூன் 30ம் தேதி அன்று, மணப்பாடுக்கு வந்த பெட்டியினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதில், 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கமானது கடத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதில், சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும், மணப்பாடில் உள்ள தூதரகத்தில் வேலை செய்யும் சரித்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதனை மறைத்து தொடர்ந்து பணி செய்து வருவதையும் சுங்க இலாக்கா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் தொடர்ந்துப் பலப் பார்சல்களை இங்கு கொண்டு வந்து இருப்பதையும், அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

எனவே, சரித்குமாரினைக் கைது செய்து விசாரிக்கையில், இதற்கு மூளையாக ஸ்வப்னா சுரேஷ் என்பவர் செயல்பட்டது, கண்டறியப்பட்டது. அவர் கேரள அரசின் ஐடி துறையில், ஆப்பரேஷன் மேலாளராகப் பணிபுரிந்து வருகின்றார். அவரைக் கண்டுபிடிக்க, சுங்கத்துறை அதிகாரிகள் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கு கடும் சர்ச்சையினை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ விசாரிக்கப் பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கினை, என்ஐஏவிற்கு மாற்றியது.

அந்த அமைப்பு விசாரணையில் ஈடுபட்டது. அப்பொழுது, ஸ்வப்னா சுரேஷ் பற்றிப் பலத் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அபுதாபியில் பள்ளிப் படிப்பினை முடித்த ஸ்வப்னா சுரேஷ், மஹாராஷ்டிராவில் தன்னுடையக் கல்லூரிப் படிப்பினையும் முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு கேரளாவிற்குத் திரும்பியுள்ளார். அதன் பின்னர், திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஏர் இந்தியா விமானத்திற்கு கீழ் இயங்கும், டிராவல்சில் பணிக்கு சேர்ந்தார்.

அவர் அங்கு வேலை செய்யும் ஆண்களின் மீது, பாலியல் புகார்களை சராமாரியாக தொடர்ந்து வந்தார். இதனால், அங்கு வேலை செய்த ஆண்கள், அடுத்தடுத்து நீக்கப்பட்டனர். இதில், ஒருவர் தன்மீது பொய்புகார் அளித்தாக, உயர்நீதிமன்றத்தில் ஸ்வப்னா மீது வழக்குத் தொடர்ந்தார். இதனால், தன்னுடையப் பணியினை ராஜினாமா செய்தார் ஸ்வப்னா. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின், தூதரகப் பணியில் சேர்ந்தார்.

அதில், அங்கு இருந்த ஆண்கள் மீதும் பல் பொய் புகார்களை அளித்து வந்துள்ளார். அப்பொழுது தான், தங்கக் கடத்தலுக்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் சரித்குமாரின் பழக்கம் கிடைத்துள்ளது. அதனைப் பயன்படுத்தி, தங்கத்தினை, ஸ்வப்னா தலைமையில் கடத்தி உள்ளனர். இதனிடையே, தொடர்ந்துப் பலப் புகார்கள் ஸ்வப்னா மீது எழுந்ததால், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், கன்சல்டன்சி மூலம் கேரளாவின் அரசாங்க ஐடி துறையில், ஆபரேஷன் மேலாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும் பொழுது, கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளரான சிவசங்கரனுக்கும் ஸ்வப்னாவிற்கும் தொடர்பு ஏற்பட்டது. இதன் மூலம் தங்கம் கடத்தி இருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தங்கம் கடத்திய வழக்கானது, கேரள அரசினை அசைத்துப் பார்த்துள்ளது.

எதிர்கட்சிகளின் கருத்தால், கேரள முதல்வர் பினராய் விஜயன் தன்னுடைய முதன்மை செயலளாரை பணிநீக்கம் செய்தார். மேலும், விரிவான விசாரணைத் தேவை என, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து, என்ஐஏ விசாரணையை ஆரம்பித்தது. அந்த அமைப்பானது, இந்த வழக்கின் மூளையாக செயல்படும் ஸ்வப்னாவினை, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்களில் தேடியது.

அதில், பெங்களூரு மாவட்டத்தில் குடும்பத்தாருடன் இருந்த ஸ்வப்னாவினை, என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS