நாடு முழுவதும் வருகின்ற மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், பல மாநிலங்கள் ஆன்லைன் டெலிவரிக்கு அனுமதி அளித்துள்ளன. இதனை முன்னிட்டு, பல நிறுவனங்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். ஆனால், தற்பொழுது போதுமான ஆட்கள் கிடைக்காததால், டெலிவரி செய்வதில் மிகப் பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவைகளை ஈடுகட்டும் விதமாக, ஸ்விகி நிறுவனம் புதிய வசதியினை உருவாக்கி உள்ளது.
தன்னுடைய செயலியில் புதிதாக டேப் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள தலைசிறந்த பிராண்டுகளைச் சேர்ந்த மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வாங்க இயலும். இந்த சேவையினை சுமார் 125 நகரங்களில் வழங்க, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் தங்களுடைய வீட்டு வாசலில், பொருட்களை எளிதாகவும், விரைவாகவும் வாங்க இயலும் என்று கூறப்படுகின்றது.