இன்று, சென்னை தியாகராயர் பகுதியில் அமைந்துள்ள தன்னுடைய அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்தர் அரசியலுக்கு அதிர்ஷ்டம் முக்கியம் எனக் கூறியுள்ளார்.
தான் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கான விநியோகஸ்தர்களின் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக தெரிவித்தார்.
அப்பொழுது, ரஜினி மற்றும் கமல்ஹாசன் இணைந்து செயல்படுவது குறித்து செய்தியாளர்கள் தங்களுடையக் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டிஆர், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சினிமாத் துறையில் எனக்கு மூத்தவர்கள். அரசியலில் நான் அவர்களுக்கு மூத்தவன். அனுபவத்தை வைத்துக் கொண்டு, அரசியலில் வென்றுவிட முடியாது. கொஞ்சம் அதிர்ஷ்டமும் முக்கியம் எனக் கூறினார்.
அப்பொழுது, நீங்கள் அரசியலில் நிலைக்க முடியவில்லை என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சற்று கோபமாகப் பதிலளித்த டிஆர், நான் ஆட்சி அமைப்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன் என என்றுமே கூறியதில்லை. மாறாக, அரசியலில் இருப்பவர்களை ஒரு பிடி பிடிப்பதற்காகவே வந்தேன். அமைச்சர்களுக்கு நிகரான, மாநில சிறுசேமிப்புத் துறையின் தலைவர் பதவியினை, ஈழத்தமிழர் பிரச்சனைக்காக தூக்கி எறிந்தவன் நான். என்னை, நீங்கள் அரசியலில் நிலைக்காதவர் எனக் கூறினால் பரவாயில்லை எனக் கூறினார்.