திரிஷாவின் சம்பளத்தினை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்! சிவா எச்சரிக்கை!

27 February 2020 சினிமா
trisha.jpg

நடிகை திரிஷாவின் சம்பளத்தினை, திரும்பப் பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தயாரிப்பாளர் டி சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் வரும் 28ம் தேதி வெளி வர உள்ள திரைப்படம் பரமபதம். இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பானது, சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகை திரிஷா கலந்து கொள்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. படத்தில், திரிஷாவினைத் தவிர மற்ற அனைவருமே புதுமுகம் என்பதால், அவருடைய பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கடைசி வரை வரவில்லை. இதனால், கடுப்பான தயாரிப்பாளர் டி சிவா பேசுகையில், சொன்ன சம்பளத்தினை எவ்விதப் பாக்கியும் இன்றிக் கொடுத்தப் பின், படத்தின் விளம்பரத்திற்காக வராமல் இருப்பது அநியாயம். இதனால், சம்பளத்தின் ஒரு பகுதியின அவரிடம் இருந்து மீண்டும் வாங்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். நடிகர் அஜித் குமார், நடிகை நயன்தாரா உள்ளிட்டவர்கள், பட ஒப்பந்தத்தின் பொழுதே, பட விளம்பரங்களுக்கு வரமாட்டோம் என கையெழுத்திடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS