கொரோனா எதிரொலி! தள்ளி வைக்கப்பட்டது டி20 உலகக்கோப்பை!

21 July 2020 விளையாட்டு
iccworldt20.jpg

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற இருந்த உலகக்கோப்பை டி20 போட்டியானது, அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த, உலகக்கோப்பை டி20 போட்டியானது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நடைபெறாமல் உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று ஐசிசி கிரிக்கெட் வாரியம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது. தற்பொழுது பரவி வருகின்ற கொரோனாவின் காரணத்தால், இந்த ஆண்டு இந்தப் போட்டியினை நடத்த இயலாது எனக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது புதிய அறிவிப்பினை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு நடைபெற இருந்த உலகக்கோப்பை டி20 போட்டியானது, வருகின்ற 2021ம் ஆண்டு நடத்த திட்டமிட்டு உள்ளது. 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்று கூறியுள்ளது. அதே போல், 2022ம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பையானது, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்றுக் கூறியுள்ளது.

2023ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை 50 ஓவர் போட்டியானது, அந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும் எனவும், அதன் இறுதிப் போட்டியானது நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS