எல்லைக்கு சென்ற இந்தியாவின் பீஷ்மா! அதி உயர் பீரங்கியால் அதிகரிக்கும் வலிமை!

25 June 2020 அரசியல்
t90sbhishmatank.jpg

இந்தியாவின் சக்தி வாய்ந்த டி90 பீஷ்மா பீரங்கிகள் தற்பொழுது, லடாக் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சீனாவின் அத்துமீறலை எச்சரிக்கும் விதமாக டி90 பீரங்கிகள் தற்பொழுது இந்திய சீன எல்லைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளன. கடந்த மே 5ம் தேதி முதல், லடாக் பகுதியில் சீன இராணுவம் அத்துமீறிப் பிரச்சனைகளை செய்து வருகின்றது. இதனால், இந்திய வீரர்கள் லே லடாக் பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இருப்பினும், சீன இராணுவத்தினர், அங்கு பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்களை நிலை நிறுத்தினர். அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், கூடாரங்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவு இந்திய வீரர்கள் கொடூரமான தாக்குதலை நடத்தினர்.

இதில், இந்தியாவின் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலும் பதற்றம் அதிகரித்தது. நேற்று ஜூன் 24ம் தேதி இரு நாட்டு இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இரு நாட்டு இராணுவமும் தன்னுடைய இராணுவ வீரர்களை பின்வாங்கிக் கொள்வதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது டி90 பீஷ்மா எனும் பீரங்கிகளை, இந்திய இராணுவம் லடாக்கின் சர்ச்சைக்குரியப் பகுதிகளில் நிலை நிறுத்தி உள்ளது. இந்த பீரங்கி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். இது, ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைக் கூட, நொடிப் பொழுதில் தாக்கும் சக்திப் படைத்தது. இது இராசயனத் தாக்குதல் மற்றும் பயோ வெப்பன் தாக்குதலையும் சமாளிக்கும் திறன் படைத்தது.

1000 ஹார்ஸ் பவுர் சக்தி கொண்ட இந்த பீரங்கியால், ஒரு நிமிடத்தில் 60 குண்டுகளை வெளியிட முடியும். இது முற்றிலும், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது. இந்த பீரங்கியின் நகர்வால், தற்பொழுது இந்திய இராணுவத்தின் பலம் கூடியுள்ளது. இதனிடையே, சீனாவிடமும் இது போல் டி95 என்ற அதி உயர் பீரங்கிகள் உள்ளன. இருப்பினும், இந்த பீரங்கியின் அளவிற்கு அவைகள் ஆற்றல் படைத்தவை அல்லை. இந்த பீரங்கியினை இந்திய இராணுவம் நிலைநிறுத்தி உள்ளதால், சீனாவுடனான பதற்றம் அதிகரித்துள்ளது.

HOT NEWS