மற்றொரு காமெடி படத்தின் மூலம், வைபவ் களமிறங்கியிருக்கின்றார். இந்தப் படத்தில் நிறைய நடிகர்கள் இருந்தாலும், வைபவ் மட்டுமே, காமெடி செய்கின்றார். யோகிபாபுவும் ஏதோ வாங்கிய காசிற்கு வேலை செய்திருக்கின்றார்.
நடிகர் பாண்டியராஜனின் குடும்பமே போலீஸ் குடும்பம். பரம்பரைப் பரம்பரையாக போலீஸாக இருக்கும் குடும்பத்தில், பாண்டியராஜனுக்கு போலீஸ் வேலைக் கிடைக்கவில்லை. அதனால், தன்னுடைய மகனைப் போலீஸாக ஆக்கியேத் தீருவேன் என தன் தந்தைக்கு சபதம் செய்கின்றார்.
இதனால், வைபவ்விற்கு போலீஸ் பயிற்சி உட்பட அனைத்திற்கும் அனுமதி முதல் ஆதரவு வரை அனைத்தும் தருகின்றார். வைபவ்வும் போலீஸ் தகுதித் தேர்வில் சாதனைப் படைக்கின்றார். ஆனால், டிஜிபியாக நடித்திருக்கும் ஹரீஸ் பெரடி. அவருடைய சூழ்ச்சிகளை முறியடித்து போலீசாக ஆனாரா, அவருடைய காதல் கைக் கூடியதா இல்லையா என்பது தான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் கதை அழுகப் பழையக் கதையாக இருந்தாலும், இதில் ஒரு ரசிக்கும்படியான விஷயம் உண்டு. எப்பொழுதெல்லாம் வைபவ் உணர்ச்சி வசப்படுகின்றாரோ அப்பொழுதெல்லாம் அவருடையக் குரல் பெண் குரலாக மாறிவிடும். இது போதுமே, படத்தை நம்மை பார்க்க வைக்க, அவ்வப்போது யோகிபாபுவும் நம்மை சிரிக்க வைக்கின்றார்.
படத்தின் பாடல்கள் மொக்கை என்றால், பின்னணி இசை படுமொக்கை. ஒளிப்பதிவு சுமார் ரகம். படத்தின் கதாப்பாத்திரங்களை இன்னும் சரியாக வடிவமைத்து இருந்தால், இன்னும் நல்ல வரவேற்பினை இப்படம் பெற்றிருக்கும். மேலும், இந்தப் படத்தில் அனைத்தையும் வைக்க வேண்டும் என வைத்திருக்கின்றனர். படத்தினை காமெடிப் படமாக மட்டும் உருவாக்கி இருந்தால், இந்தப் படம் டான் என இருக்கும்.
மொத்தத்தில் டாணா வேணா!