தப்லிகி ஜமாத் கூட்டத்தால் தான் கொரோனா பரவியது! மத்திய அரசு குற்றச்சாட்டு!

22 September 2020 அரசியல்
modi7request.jpg

டெல்லியில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தால் தான், பெருமளவில் கொரோனா வைரஸானது பரவியுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.

தற்பொழுது இந்திய பாராளுமன்றக் கூட்டத் தொடரானது, மும்முரமாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டத்தில், தப்லிக் ஜமாத் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அவர் இது குறித்துப் பேசுகையில், தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் விதிமுறைகளை மீறி, கொரோனா பரவல் சமயத்தில் கூடியிருந்த 236 பேரை போலீசார் பதிவு செய்தனர்.

அங்கிருந்த 2361 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். டெல்லி அரசு விதித்திருந்த கொரோனா விதிகளை மீறி, சமூக இடைவெளிகளைக் கடைபிடிக்காமல், சானிடைசர் பயன்படுத்தாமல், முகமூடிகளை அணியாமல் அனைவரும் ஒன்றாக கூடியிருந்தார். இதனால், தான் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவியது. தவ்ஹீத் ஜமாத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த மார்ச் மாதம் 35 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தவ்ஹீத் ஜமாத் மாநாட்டிற்கு வந்திருந்தனர். அவர்களில் 11 மாநிலங்களில் உள்ள 2765 பேர் மீது, 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS