தைவான், ஹாங்காங்கில் இந்தியாவிற்கு பெருகும் ஆதரவு! வைரலான புகைப்படம்!

20 June 2020 அரசியல்
ramdragon.jpg

இந்தியாவினை சீனாவின் இராணுவம் அத்துமீறித் தாக்கியதற்குப் பிறகு, இந்தியாவிற்கு பல நாடுகளும் இரகசியமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

சீனாவின் அத்துமீறியத் தாக்குதல் காரணமாக, 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இரண்டு நாட்டு எல்லையிலும், கடும் பதற்றத்தினை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு இந்தியா தான் காரணம் என, தொடர்ந்து இந்தியா மீது சீன வெளியுறவுத்துறை குற்றம்சாட்டி வருகின்றது. இதனிடையே, தற்பொழுது சீனாவினை எதிர்த்தும், இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தும் தைவான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பேசி வருகின்றனர்.

தைவான் மற்றும் ஹாங்காங் உள்ளிட்டப் பகுதிகள், சீன அரசாங்கம் அத்துமீறி கைப்பற்ற நினைக்கின்றது. தற்பொழுது ஹாங்காங் பகுதியில், சீனாவிற்கு எதிராகக் கடும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. தைவான் நாட்டினையும், தங்களுடையப் பகுதி என, சீன ஆக்கிரமித்தது. இதனை, அப்பகுதிகளில் வாழும் மக்கள் விரும்பவே இல்லை.

இருப்பினும், தன்னுடைய அதிகாரப் பலம் மற்றும் இராணுவத்தினை வைத்து ஆட்சி செய்து வருகின்றது. ஹாங்காங்கினைக் கைப்பற்றும் முயற்சியில் சீனா தற்பொழுது முழுமையாக ஈடுபட்டு வருகின்றது. அங்கு வசிக்கின்ற மக்கள், சீனாவினை எதிர்த்து சமூக வலைதளங்களில் புதிய பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் இராமர், சீனாவின் டிராகனை வீழ்த்துவார் என்றப் போஸ்டரை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

இது தற்பொழுது இணையத்தில் வைரலாக உள்ளது. இதனை, தைவான் செய்தி நிறுவனம் தன்னுடைய வலைதளத்திலும் முதன்மைப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்தியாவுடன் மட்டுமின்றி, ஹாங்காங், தைவான், உள்ளிட்டவைகளுடன் சீன அரசாங்கம் தொடர்ந்து மோதல் போக்கினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS