சீனாவினை எதிர்க்க போர் விமானங்களை வாங்கும் தைவான்! அதிகரிக்கும் நெருக்கடி!

16 August 2020 அரசியல்
f16fighterjet.jpg

சீனாவினை எதிர்க்கும் பொருட்டு, எப்-16 ரகப் போர் விமானங்களை வாங்க, தைவான் அரசு தற்பொழுது முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் லாக்ஹெட் மார்டின் என்ற நிறுவனம், தான் தயாரிக்கின்ற எப்-16 என்ற போர் விமானத்தினை உலகம் முழுக்க விற்பனை செய்து வருகின்றது. இந்த விமானத்தினை வாங்க தற்பொழுது பத்து வருட ஒப்பந்தமானது ஒரு நாட்டுடன் நடைபெற்று உள்ளதாக, அமெரிக்காவின் பெண்டகன் அறிவித்துள்ளது.

மொத்தமாக, 62 பில்லியன் டாலர் அளவிற்கு இந்த ஒப்பந்தம் நடைபெற்று முடிந்து உள்ளதாகவும் இதன் காரணமாக, விரைவில் அந்த நாடு இந்த விமானங்களைப் பெறும் என்றும் கூறியுள்ளது. இதனிடையே, இந்த விமானங்களை தைவான் அரசு தான் வாங்குகின்றது என அமெரிக்க செய்தி ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.

சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த விமானங்கள் கிடைத்தவுடன் தைவானின் விமானப்படை வலிமை அடையும் எனவும் கூறியுள்ளன. இது தற்பொழுது சீனாவிற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS