பிரபல திரைப்பட நட்சத்திரம் பாலாசிங் மரணம்!

27 November 2019 சினிமா
balasingh.jpg

புதுப்பேட்டை, என்ஜிகே, இந்தியன் உட்பட பல வெற்றித் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்த நடிகர் பாலாசிங் இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்.

நாடகக் கலைஞரான பாலாசிங், அவதாரம் என்றப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்தப் பலப் படங்கள் வெற்றியடைந்துள்ளன. குணச்சித்திர நடிகர், துணை நடிகர், வில்லன் உட்பட பல கதாப்பாத்திரங்களில் இவர் நடித்து வந்தார்.

62 வயதான பாலாசிங், சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை வட பழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், இன்று அதிகாலை 2 மணியளவில், பாலாசிங் மரணமடைந்தார். இதனையடுத்து, அவருடைய பூத உடல் தற்பொழுது, சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்படுகின்றது. அவருடைய இறுதிச் சடங்கானது, நாளை அவருடைய சொந்த ஊரான களியக்காவிளையில் நடைபெற உள்ளது. இவருடைய மறைவிற்கு, தமிழ் சினிமா ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் தங்களுடைய அனுதாபத்தினை செலுத்தி வருகின்றனர்.

HOT NEWS