pic credit:amc productions & Respective owners
தமிழக மக்களையும், டிவி சீரியலையும் பிரிக்க இயலாது. அந்த அளவிற்கு நம் மக்கள் டிவி சீரியலை உயிராக கருதுகின்றனர். இதனை வைத்தே, பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், காலையில் ஆரம்பித்து நள்ளிரவு வரை, தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
அப்படி இருக்கையில், தற்பொழுது அனைவருமே இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால், ஹாலிவுட் படங்களின் வருகையும் தமிழகத்தில் அதிகரித்தது. அதற்கு ஒரு நல்ல உதாரணமே, அவெஞ்சர்ஸ் முதல் பார்ஸ்ட் அன்ட் ப்யூரியஸ் வெற்றிகள்.
சரி நம் மக்கள் படம் தான் திரையறங்கு சென்றோ அல்லது இணையத்தில் டவுன்லோட் செய்தோ பார்க்கின்றனர் என்றால், அதனையும் தாண்டி தற்பொழுது, ஹாலிவுட் நாடகங்களைப் பார்க்க ஆரம்பித்து வருகின்றனர்.
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் முதல் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வரை, அனைத்தையும், விடாமல் பார்த்து வருகின்றனர். இதனை வைத்தே, நெட்ப்ளிக்ஸ் முதல் அமேசான் வரை, அனைத்து அமெரிக்க நிறுவனங்களுமே, இந்தியாவில் தொழிலைத் தொடங்கிவிட்டனர். அவர்கள் ஹாலிவுட் டிவி தொடர்களை, தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
இவை இன்னும் நம் மக்களை, அந்த நாடகங்களுக்கு ரசிகர்களாக்கி விட்டனர். தற்பொழுது, பல நாடகங்களும் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் சமயத்தில், இந்தியாவிலும் தமிழில் ஒளிபரப்புகின்றன. இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுவது, வித்தியாசமான திரைக்கதையும், பிரம்மாண்டமுமே.
நம் தமிழ் தொலைக்காட்சிகளில், கள்ளக் காதல், காதல், பேய் நாடகம், மாமியார் மருமகள் சண்டை என நாடகங்களை எடுக்கின்றனர். இது பல ஆயிரம் முறை, திரையிலும், டிவியிலும் பார்த்து சலித்து நம் மக்களுக்கு, ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் நாடங்களை நோக்கி செல்கின்றனர்.