இனி அரசியலுக்கு வர மாட்டேன் எனக் கூறிய தமிழருவி மணியன், தற்பொழுது மீண்டும் அரசியலில் குதித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டேன் என்றுக் கூறியதும், இனி நான் அரசியலுக்கு வர மாட்டேன் எனவும், அரசியலை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார் தமிழருவி மணியன். கடந்த ஜனவரி 10ம் தேதியன்று, காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுக்குழுக் கூட்டமானது நடைபெற்றது. அதில் 85 நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில், தமிழருவி மணியனும் கலந்து கொண்டார்.
அதில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக, தமிழருவி மணியனேத் தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழருவி மணியனும் ஒப்புக் கொண்டார். மேலும் தன்னுடைய இயக்கத்தில் ஒரு லட்சம் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பத்து லட்சமாக உயர்த்தவும் அக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். காந்திய மக்கள் இயக்கமானது, ரஜினி மக்கள் இயக்கத்துடன் இணையாது என்றும் கூறப்பட்டு உள்ளது.
சாகும் வரை அரசியலுக்கு வர மாட்டேன் என்றுக் கூறியவர், தற்பொழுது பத்தே நாட்களுக்குள் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்து விட்டார் என, பலரும் தங்களுடைய கருத்துக்களைக் கிண்டலாக முன் வைத்து வருகின்றனர்.