தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல் முருகன் தியாகராஜ சுவாமி கோயிலின் அருகில், வேல் யாத்திரையின் பொழுது கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இந்த சூழ்நிலையில், திட்டமிட்டப்படி, வேல் யாத்திரை நடைபெறும் என, பாஜக தலைவர் எல் முருகன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அவர் அறிவித்தது போல, திருத்தணியில் அவர் தன்னுடைய வேல் யாத்திரையினைத் துவங்கினார். அங்கு அவருக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், 6 வாகனங்களில் அவர் செல்ல அனுமதி வழங்கியது போலீஸ்.
அவர் கோயிலுக்குச் செல்கையில், அவரைப் போலீசார் ஊடங்குக் காலத்தில் கூட்டம் கூட்டியதற்காக கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர். இந்த சூழ்நிலையில், ஞாயிறு அன்று மீண்டும் பாஜகவின் வேல்முருகன் வேல் யாத்திரையினை மேற்கொண்டார். அந்த யாத்திரையின் பொழுது, தியாகராஜ சுவாமி கோயிலின் முன்பு, சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், அவரை திருமண மண்டபத்தில் அடைத்தனர்.