3வது நாளாக வேல் யாத்திரை சென்ற தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உட்பட, பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், பாஜகவினர் தங்களுடைய வேல் யாத்திரையினை திட்டமிட்டப்படி, நடத்தி வருகின்றனர். இந்த வேல் யாத்திரைக்கு முதலில் தடை கூறிய போலீசார், பின்னர் ஆறு வாகனங்களுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், திருத்தணியில் திட்டமிட்டப்படி, எல் முருகன் தன்னுடைய யாத்திரையினைத் தொடங்கினார். இருப்பினும், முதல் நாளே அவர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர், நேற்றும் வேல் யாத்திரையினை நடத்தினார். அவர் தியாகராஜசுவாமிக் கோயிலில் வழிபாடு செய்தார். அப்பொழுதும் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், இன்றும் சென்னையில் உள்ள செங்கல்பட்டு பகுதியில் வேல் யாத்திரையினைத் துவங்கினார். அதனை தடுத்தப் போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், எல் முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கப் பதிவு செய்துள்ளனர்.