2021ம் ஆண்டிற்கான சட்டசபைத் தேர்தலில், பாஜக கைக்காட்டும் நபர்கள் தான் ஆட்சியில் இருப்பார்கள் என, பாஜக மாநில தலைவர் எல் முருகன் கூறியுள்ளார்.
இன்று பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டமானது நடைபெற்றது. இதில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பேசுகையில், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். நாம் கைக்காட்டும் கட்சியினர் தான், தமிழகத்தில் 2021ம் ஆண்டில் ஆட்சியில் அமர்வர். பாஜகவினரின் வெற்றிக்காக கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
வருகின்ற தேர்தலில், பாஜக வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்து சட்டசபைக்கு அனுப்பும் மாவட்டத் தலைவருக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என, எல்முருகன் தெரிவித்தார். இது தற்பொழுது, பேசுபொருளாக மாறியுள்ளது.