தமிழக அரசின் கடன்சுமை அதிகரிப்பு-திமுக எம்எல்ஏ அதிரடி பேட்டி!

14 February 2020 அரசியல்
ptr.jpg

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், இன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில், தமிழக பட்ஜெட்டினை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

இதற்கிடையே, நேற்று திமுக தலைமையகமான, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு செயலாளரும் எம்எல்ஏவுமான பழனிவேல் தியாகராஜன் பெரிய குண்டு ஒன்றினைப் போட்டார். அதில், தமிழகத்தில் வருவாயினைக் காட்டிலும், செலவுகளே அதிகமாக உள்ளது எனவும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் கடன்சுமை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சி சரிவானப் பாதையில் செல்வதாகவும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும், 45,000 ரூபாய் அளவிற்கு கடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

HOT NEWS