அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பண்டிகைக் காலத்தில் வந்த ஜாக்பாட்!

18 October 2019 அரசியல்
tnlogo.jpg

அரசு ஊழியர்களுக்கான, அகவிலைபடியினை 5 சதவிகிதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், 12 சதவீதமாக இருந்து வந்த அகவிலைப்படி, இனி 17 சதவீதமாக வழங்கப்பட உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியானது, 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், முழு நேர அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பயனடைவர். இதன் அகவிலைப்படி உயர்வின் காரணமாக, 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைய உள்ளனர்.

HOT NEWS