தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை! அமைச்சர் அறிவிப்பு!

11 March 2020 அரசியல்
vijayabashkarcorona.jpg

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் சுமார் 50 பேர், இந்த கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸானது, தமிழகத்தினைச் சேர்ந்தவருக்கும் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு திரும்பிய கட்டிடப் பொறியாளருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை சென்னையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்து, தனி வார்டில் சிகிச்சை அளித்தும், கண்காணிக்கவும் செய்தனர்.

அவருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கோவிட்-19 எனப்படும், கொரோனா வைரஸ் தொற்று இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை மகிழ்ச்சியுடன், செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார் விஜயபாஸ்கர். மேலும் அவர் பேசுகையில், தமிழகம் தற்பொழுது கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

HOT NEWS