16ம் தேதி வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

14 May 2020 அரசியல்
may16puyal.jpg

மத்திய வங்கக் கடல் பகுதியில் வருகின்ற மே-16ம் தேதி அன்று, புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் காலையில் அக்னி வெயில் சுட்டெரித்தாலும், மாலையில் காற்று வீச ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய புயல் ஒன்று உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயல் காரணமாக, தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில், மணிக்கு சுமார் 55 கிலோ முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையான சூறாவளிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஒரு சில சமயம் 75 கிலோமீட்டர் வேகத்திலும், புயல்காற்று வீசுவதற்கு வாய்ப்புள்ளது எனவும், எனவே மீனவர்கள் வருகின்ற மே 15, மே 16, மே 17 ஆகியத் தேதிதகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்தப் புயலால் ஏற்படும் வெப்பச்சலனம், மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் மேலடுக்குச் சுழற்சியின் மூலம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

HOT NEWS