ஊரக உள்ளாட்சித் தேர்தல்! திமுக முன்னிலை! சொற்ப வித்தியாசத்தில் அதிமுக பின்னடைவு!

03 January 2020 அரசியல்
aiadmkvsdmk.jpg

கடந்த மூன்று ஆண்டுகளாக, நடைபெறாமல் இருந்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலானது, கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில், பொதுமக்கள் உற்சாகமாக கலந்து, தங்களுடைய வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தினர். இந்த வாக்குப் பதிவில், நான்கு வண்ண வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு சில இடங்களைத் தவிர்த்து, பெரும்பான்மையான இடங்களில், அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இதில், திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகளின் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே, கடுமையானப் போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளும், ஒருவரை ஒருவர் முந்தியபடியே இருந்தனர். இருப்பினும், திமுக தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது.

தற்பொழுது வரை, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக 242 தொகுதிகளிலும், திமுக 271 தொகுதிகளிலும் வென்றுள்ளன. பிற கட்சிகள் 00 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதே போல், ஒன்றியக் கவுன்சிலர்களுக்கான தேர்தலில் மொத்தமுள்ள 5067 தொகுதிகளில், 2332 இடங்களில் திமுகவும், 2187 இடங்களில் அதிமுகவும் வெற்றிப் பெற்றுள்ளன. பிற கட்சிகள் 541 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் மாவட்டங்கள் என, மொத்தம் 12 மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி வென்றுள்ளது. ஒன்றரை நாளுக்கும் மேலாக, நடைபெற்று வரும் வாக்கு எணிக்கையானது, தற்பொழுது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது.

HOT NEWS