தமிழகத்தில் டிசம்பர் மாதம் முழுக்க, ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தால், மார்ச் மாதம் 25ம் தேதி முதல், ஊரடங்கானது இந்தியா முழுக்க அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கானது தொடர்ந்து நவம்பர் 30ம் தேதி வரை தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், இந்த மாதத்துடன் ஊரடங்கு முடிவடைவதால், இதனை நீட்டிப்பது குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தற்பொழுது தமிழக அரசு புதியதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, டிசம்பர் மாதம் 31ம் தேதி இரவு 12 மணி வரை இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் (நவம்பர்) அமலில் இருந்து விஷயங்களே, இந்த மாதமும் பின்பற்றப்படும். மருத்துவம் மற்றும் அதுசார்ந்தப் படிப்புகள் அனைத்தும், டிசம்பர் 7ம் தேதி துவங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் 14ம் தேதி அன்று முதல், பொதுமக்கள் மெரினா கடற்கரைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்துக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு டிசம்பர் 7ம் தேதி அன்று முதல் வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டங்கள் நடத்துவதற்கு, உரிய முறையில் காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். உள் அறங்குகளில், சமுதாயக் கூட்டங்களினை 200 பேருக்கும் மிகாமல் நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வருவதற்கு, கட்டாயம் இபாஸ் பெறுவது கட்டாயம் எனக் கூறப்பட்டு உள்ளது. தொடர்ந்து சமூக இடைவெளியினை கடைபிடித்தல், முகக் கவசம் அணிவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.