மே-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! எதற்கெல்லாம் அனுமதி?

17 May 2020 அரசியல்
edappadicovid19.jpg

தமிழகம் முழுவதும் இன்றுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மே-31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் மூன்று மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் அப்பொழுது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் தற்பொழுதுள்ள ஊரடங்கானது மே-31ம் தேதி இரவு 12 மணி வரை, நீட்டிக்கப்படும் என அறிவித்தார்.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில், எவ்வித தளர்வும் அனுமதிக்கப்பட மாட்டாது. தற்பொழுது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். மற்ற 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன.

இருப்பினும், பள்ளிகள், கல்லூரிகள் செயல்படத் தடை. வழிபாட்டுத் தளங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை, வெளியூர் சுற்றுலாப் பயணிகள், நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டிப் போன்றப் பகுதிகளுக்கு, சுற்றுலாச் செல்லத் தடை. பொதுப் போக்குவரத்திற்குத் தடை தொடர்கின்றது. ஆட்டோ, டாக்ஸிகள் உள்ளிட்டவைகள் செயல்படத் தடை. நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்விதத் தளர்வும் இல்லை.

சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் அனைத்தும் தொடரும். 25 மாவட்டங்களில், அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் போக்குவரத்து அனுமதி. இ-பாஸ் இல்லாமல், போக்குவரத்திற்கு அனுமதி. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பயணிக்க, இ-பாஸ் அனுமதி. அரசுப் பணிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், அதிகபட்சமாக 20 பேரும், வேன்களில் 7 பேரும் பயணிக்க அனுமதி.

இன்னோவா போன்ற பெரிய வகைக் கார்களில் 3 பேர் பயணிக்க அனுமதி. சிறிய கார்களில் மொத்தம் 2 பேர் பயணிக்க அனுமதி. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு முழு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், 100% பணியாளர்கள் பணிக்குச் செல்ல இயலும். சென்னை மற்றும் நோய் பாதிப்புக்கு உட்பட்ட பகுதிகளினைத் தவிர்த்து, பிற பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகுக்கு 100% வேலையாட்கள் பணிபுரிய அனுமதி.

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும், புதிய தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன.

HOT NEWS