தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! ஜேபி நட்டா அறிவிப்பு! யார் இவர்?

12 March 2020 அரசியல்
tnbjppresident.jpg

தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தர் ராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா ஆளுநராக, மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தன்னுடையக் கட்சிப் பதவியினை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோரின் பெயர்கள், அடுத்த மாநிலத் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இதனிடையே, இன்று பாஜகவின் தமிழக தலைவராக எல்.முருகன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தினைச் சேர்ந்த 42 வயதுடைய எல்.முருகன் என்பவர் சட்டப்படிப்பில் பிஎச்டி முடித்தவர். பட்டியலினத்தவரான இவர், வழக்கறிஞராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருக்கின்றார். இவர், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர்.

இவர் பேசும் பொழுது, பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். என் மீது நம்பிக்கை வைத்து, எனக்குப் பதவி வழங்கியுள்ளனர். என்னுடையப் பணியினை, தமிழ்நாட்டில் சிறப்பாக செய்வேன். ஏற்கனவே, பலமுறை மக்களைச் சந்தித்துள்ள அனுபவம் எனக்கு உண்டு எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS