வெறிச்சோடிப் போன தமிழகம்! உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

18 March 2020 அரசியல்
vijayabaskarcovid19.jpg

வருகின்ற 31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், தமிழக வீதிகள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டினரிடம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் இது பரவத் தொடங்கி உள்ளது. இதனால், பொது மக்கள் பயப்பட வேண்டாம் எனவும், அரசாங்கம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில், வருகின்ற 31ம் தேதி வரை, அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பினர். இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வணிக வளாகங்கள் மற்றும் மால்களும் மூடப்பட்டு உள்ளதால், வெளியில் நடமாடும் பொதுமக்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளது.

உணவு டெலிவரி செய்பவர்கள், வாட்டர் சப்ளை செய்பவர்கள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் மட்டுமே, வெளியில் அடிக்கடி நடமாடுகின்றனர். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை தெருவில் காண முடியவில்லை. கோயில்களிலும் கூட்டம் குறைந்து காணப்படுகின்றது. செவ்வாய் கிழமையான நேற்று, அறுபடை முருகன் கோயில்களிலும் கூட்டம் இல்லை.

திரையறங்குகளும் கூட்டம் இல்லாமல் காணப்படுகின்றது. பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தினை அடைந்துள்ளனர் எனவும், இதற்குப் பயப்பட வேண்டாம் எனவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HOT NEWS