தமிழக மாணவர்கள் எழுதும், மாநிலப் பொதுத் தேர்வின் அட்டவணைத் தற்பொழுது வெளியாகி உள்ளது. புதியப் பாடத்திட்டம், புதிய புத்தகங்கள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான, பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
அதன்படி, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. பதினோறாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம், முடிவடைகிறது.
அதே போல், ஏப்ரல் 24ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 4ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 14ம் தேதி 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளன.