10ம் வகுப்புத் தேர்வு எப்பொழுது? செங்கோட்டையன் விளக்கம்!

10 May 2020 அரசியல்
sengottaiyanka.jpg

பத்தாம் வகுப்புத் தேர்வு எப்பொழுது நடைபெறும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக வருகின்ற மே-17ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறமால் உள்ளன. சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்து, தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு எப்பொழுது நடைபெறும் எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கு தற்பொழுது அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில், சமூக இடைவெளியுடன் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறும் என்றுக் கூறியுள்ளார். தேர்வு நடைபெறும் தேதி குறித்து, முதல்வர் விரைவில் அறிவிப்பார் எனவும், தேர்வு நடத்துவது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

ஒரு வகுப்பறையில் 40 பேர் அமர்ந்து தேர்வு எழுதி வந்த நிலையில், தற்பொழுது 20 பேர் மட்டுமே அமர வாய்ப்பு உள்ளது. இதனால், காலையில் 20 பேர் மற்றும் மாலையில் 20 பேர் தேர்வு எழுத அனுமதிக்கலாமா எனவும் யோசனை செய்து வருகின்றனர்.

HOT NEWS