தமிழகத்தில் ஆரம்பித்த மழை!

16 October 2019 அரசியல்
rain.jpg

நாளை வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்க உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே, தமிழகத்தின் பலப் பகுதிகளில் மழைப் பெய்ய ஆரம்பித்துவிட்டது.

இதனால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் மற்றும் கிணறுகளில் நீர் நிரம்பத் தொடங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாக, நீர் இல்லாமல், சென்னை உட்பட பல மாவட்டங்களில், குடிநீருக்காக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இப்பொழுது, மழை பெய்ய ஆரம்பித்து உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் தற்பொழுது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, விழுப்புரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில், கடுமையாக மழை பெய்து வருகின்றது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிகப்பட்டுள்ளது.

தற்பொழுது, பெய்யும் மழையினை சேமித்தாலே, பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையான நீர் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

HOT NEWS