24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பி அனுப்புகின்றது!

28 April 2020 அரசியல்
rapidtestkit12.jpg

தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்ட 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை திருப்பி அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, ஐசிஎம்ஆர் அமைப்பால் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களில், ஒன்றில் இருந்து தான் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பெறப்பட்டன என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசு நிர்ணயித்த 600 என்ற விலையில் தான், ரேபிட் டெஸ்ட் கருவியனாது வாங்கப்பட்டது எனவும், அதில் எவ்விதக் குளறுபடி இல்லை எனவும் கூறியுள்ளார். திமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான முகஸ்டாலினின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

தற்பொழுது ரேபிட் டெஸ்ட் கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது என, ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளக் காரணத்தால், தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்ட 24,000 கருவிகளை மீண்டும் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

HOT NEWS