ஜூன் 1 முதல் தமிழகத்தின் பெரிய கோயில்களில் வழிபாட்டிற்கு அனுமதி?

21 May 2020 அரசியல்
maduraimeenakshiammantemple.jpg

வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள முக்கியக் கோயில்களைத் திறக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகின்றது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே31ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோயில்கள், புனித ஸ்தலங்கள், தீர்த்தங்கள், திரையறங்குகள், மால்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன.

பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனடிப்படையில், அநேகமாக ஜூன் ஒன்றாம் தேதி அன்று, தமிழகத்தில் உள்ள கோயில்களைத் திறக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோயில்களை அன்று திறந்தால், சமூக இடைவெளியினைக் கடைபிடிப்பது, அர்ச்சகர்களுக்கு பாதுகாப்பு, பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை ஆலோசித்து வருகின்றனர். எப்படி இருப்பினும், குறிப்பிட்ட அளவிலான பக்தர்களே, கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் எனக் கூறப்படுகின்றன.

HOT NEWS