நாளை தான் பிறை தெரியும்! தமிழகத்திற்கு நாளை தான் ரம்ஜான்!

24 May 2020 அரசியல்
mosqueeid.jpg

தமிழகத்தில் நாளை தான் பிறை தெரியும் என்பதால், நாளை தான் தமிழகத்தில் ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழகத்தின் மூத்த ஹாஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்பொழுது இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து வருகின்றனர். இது இஸ்லாமியர்களின் தலையாயக் கடமையாகும். கடந்த மாதம் தொடங்கிய இந்த நோன்பானது, நாளையுடன் முடிவடைய உள்ளது.

நோன்பு இருக்கும் பக்தர்கள், சூரிய உதயத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வேண்டும். சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் நோன்பைத் தொடங்க வேண்டும். பின்னர், மீண்டும் சூரியன் மறைந்த பின்னர் உணவு உண்ண வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகின் பல நாடுகளில், இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகின்றது.

அதற்கு மூன்றாம் பிறையானது, வானில் தெரிய வேண்டும். ஆனால், தமிழகத்தில் இன்று இந்தப் பிறைத் தெரியாது எனவும், நாளை மே-25ம் தேதி தான், மூன்றாம் பிறைத் தெரியும் எனவும், தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். இதனையொட்டி, கொரோனா வைரஸ் காரணமாக, இந்த ஆண்டு அனைவரும் தங்களுடைய வீடுகளிலேயே ரம்ஜானை சிறப்பாகக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

HOT NEWS