தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு தடை விதித்து, டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அதில் தன்னுடையப் படங்களையும், நிகழ்ச்சிகளையும் தமிழ்ராக்கர்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்வதால், தங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதாக கூறியது. இதனை விசாரித்த நீதிபதி, அவர்களை உரிமையை சரிபார்த்தப் பின், தமிழ்ராக்கர்ஸ் உட்பட பல இணையதளங்களுக்கு தடை விதித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் முகவரி முடக்கபட உள்ளது.