ரேட்டு கூட இருந்தாலும் பரவாயில்லை. நாட்டு வெங்காயம் தாங்க! மக்கள் ஆர்வம்!

13 December 2019 அரசியல்
egyptonion.jpg

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், வெங்காயத் தட்டுப்பாட்டினை சமாளிக்க எகிப்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

இதனிடையே, எகிப்தில் இருந்து வந்த வெங்காயமானது, தமிழகம் முழுக்க விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகின்றது. இதனை, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளது. எகிப்து வெங்காயம் உடலுக்கு நல்லது என, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ போகின்ற போக்கில் பேட்டியும் கொடுத்துள்ளார்.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கின்ற நிலையிலும், பொதுமக்கள் எகிப்து வெங்காயத்தினை சீண்டுவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து, நாட்டு வெங்காயத்தினை வாங்குவதற்கே மக்கள் விரும்புகின்றனர். எகிப்து வெங்காயம் பீட்ரூட் சைசில் இருப்பதால், ஒரு கிலோவிற்கு இரண்டு முதல் மூன்று வெங்காயமே நிற்கின்றது. இதனால், தமிழக இல்லதரசிகளுக்கு எகிப்து வெங்காயத்தின் மீது ஈடுபாடு ஏற்படவில்லை.

தொடர்ந்து விலை அதிகரித்தாலும் பரவாயில்லை என, நாட்டு வெங்காயத்தினையே வாங்குகின்றனர்.

HOT NEWS