டாஸ்மார்க் வருவாய் 30,000 கோடி! தமிழ் குடிமகன்கள் இமாலய சாதனை!

15 February 2020 அரசியல்
tasmac.jpg

நேற்று (14-2-2020) தமிழக சட்டப்பேரவையில், தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்பொழுது தமிழகத்தின் கடன் அளவு நான்கரை லட்சம் கோடி ரூபாய் எனக் கூறினார்.

இதற்கு, பலரும் தங்களுடையக் கண்டனங்களைத் தெரிவித்தனர். தமிழகத்தின் கடன்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதத்தில், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசும் பொழுது, தமிழகத்தின் கடன்சுமையானது வரம்பிற்குள் தான் உள்ளது எனவும், வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவது சகஜமானது தான் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் டாஸ்மார்க் மூலம் வரும் வருவாயின் அளவானது, கடந்த ஆண்டு 30,000 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS