1.62 லட்சம் அபராதம் கட்டிய தனியார் ரயில்! தாக்குப் பிடிக்குமா? அல்லது ஓட்டம் எடுக்குமா?

23 October 2019 அரசியல்
tejasexpress.jpg

இரண்டு மணி நேரத்திற்கு மேலாகத் தாமதம் ஆனதால், ஏற்கனவே கூறியபடி, ஒவ்வொரு பயணிக்கும் சுமார், 250 ரூபாயை அபராதமாக வழங்கியுள்ளது தேஜஸ் ரயில்.

லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு கிளம்ப வேண்டிய இரயில், மூன்றரை மணி நேரம் தாமதமாக 9.55 மணிக்கு கிளம்பியது. அதே போல், டெல்லியினை 12.25 மணிக்கு சென்றடைய வேண்டிய நிலையில், 3.40 மணிக்கு சென்றடைந்தது. இதனால், மூன்று மணி நேரம் தாமதமாக சென்றதாக அதில் பயணம் செய்த பயணிகள் கூறினர். இதனால், லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்ற 450 பயணிகளுக்கு 250 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. அதே போல், டெல்லியில் இந்த இரயலிற்காக காத்திருந்த 500 பயணிகளுக்கு தலா, 100 ரூபாய் பணம் வழங்கப்பட்டது.

இந்தப் பணத்தினை இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கி அளித்துள்ளது. தொடர்ந்து, ஆறு நாட்களும் மிகவும் கடினமான அட்டவணையானது இந்த தனியார் ரயிலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இத்தகையத் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

வாரம் ஆறு நாட்களும் ஓடும் இந்த இரயில், லக்னோவில் இருந்து டெல்லிக்கு காலையிலும், டெல்லியிலிருந்து லக்னோவிற்கு மாலையிலும் இயக்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது, அபராதம் செலுத்தியுள்ளதால், முதன் முதலாக அபராதம் செலுத்திய தனியார் ரயில் என்ற பெயரையும் இந்த இரயில் பெற்றுள்ளது.

HOT NEWS