தமிழ்நாட்டின் சூலூரில் இருந்து பாகிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு, தற்பொழுது தேஜஸ் போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது மோதல் நிலவி வருகின்றது. இரண்டு நாடுகளும், தங்களுடைய படைகளை லடாக் மற்றும் லே பகுதிகளில் நிலை நிறுத்தி வைத்து உள்ளன. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் நாடு, சீனாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒவ்வொரு நாளும், இந்தியாவில் கைது செய்யப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் நாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தின் சூலூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தேஜஸ் ரகப் போர் விமானங்கள் இந்தியாவின் மேற்குப் பகுதிக்குப் பறந்துள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு சூலூரில் தேஜஸ் விமானத்திற்கான படைத்தளமானது அமைக்கப்பட்டது. தற்பொழுது, அங்கு பலப் போர் விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்திய விமானப் படையானது, தற்பொழுது தன்னுடைய போர்விமானங்களை அப்கிரேட் செய்து வருகின்றது. இந்த விமானங்களினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி உத்தரவுப் பிறப்பித்தக் காரணத்தால், அவைகளைத் தற்பொழுது துரித கதியில் தயார் நிலைக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.