சூடு பிடிக்கும் பீகார் தேர்தல்! என்னுடன் மேடையில் பேசத் தயாரா? நிதிஷிற்கு தேஜஸ்வி சவால்!

20 October 2020 அரசியல்
tejashwiyadav.jpg

பீகாரில் தற்பொழுது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரே மேடையில் என்னுடன் பேசத் தயாரா என, நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் சவால் விடுத்து உள்ளார்.

பீகார் மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தலானது நடைபெபற, இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் அங்கு பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் இடையில் நேரடிப் போட்டியானது உருவாகி உள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலது சாரி, இடது சாரி கம்யூனிஸ்ட்கள் எனப் பெரிய கூட்டணி உருவாகி உள்ளது.

அதே போல் நிதிஷ் குமார் கூட்டணியில் பாஜக உள்ளது. இதில், லாலுபிரசாத் சிறையில் உள்ளதால், அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் தான், அவருடைய கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளாரக அதிரடியாகக் களமிறங்கி உள்ளார். அவர் தற்பொழுது பலமானத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். நேற்று, நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் பேசி அவர், பெரியக் கூட்டணியால் தான், திறமையாக ஆட்சி செய்ய இயலும்.

நாம் நம்முடையத் தேர்தல் அறிக்கையில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளைப் பற்றி பேசியுள்ளோம். கடந்த 15 ஆண்டுகளில், முதல்வர் நிதிஷ்குமார் என்ன செய்துள்ளார். அவருடைய சாதனைகளைப் பற்றிப் பேசத் தயாரா? என்னுடன் ஒரே மேடையில் உங்கள் முன்னிலையில் பேசுவதற்கு அவர் தயாராக உள்ளாரா என, என்றுக் கேள்வி எழுப்பி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7ம் தேதி அன்று, 243 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 10ம் தேதி அன்று, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

HOT NEWS