மாநில அரசுகளை பிச்சைக்காரர்கள் போல நடத்துகின்றது மத்திய அரசு! தெலுங்கானா சிஎம் அதிரடி!

20 May 2020 அரசியல்
chandrashekarrav.jpg

மாநில அரசுகளை பிச்சைக்காரர்கள் போல, மத்திய அரசு நடத்தி வருவதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாகப் பேசியுள்ளார்.

மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பல பொருளாதார சீர்த்திருத்தங்களை அறிவித்துள்ளது. இதனை கடந்த வாரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐந்து நாட்களாக அறிவித்து வந்தார். இந்த சூழ்நிலையில் எதிர்கட்சியினர் அனைவரும், நிர்மலா சீதாராமனின் அறிவிப்பிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ், மோடியின் அரசு எதேச்சை அதிகார அரசாக செயல்படுகின்றது. நிதியமைச்சரின் அறிவிப்புகள், வெறும் எண்களைக் கொண்ட வார்த்தைகளாக உள்ளன. உலகப் பத்திரிக்கைகள் பலவும், இவருடைய அறிவிப்பினை கிண்டல் செய்து வருகின்றன. இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், கூட்டாட்சி குறித்து பேசுகின்றார். ஆனால் அவைகள் அனைத்தும் மிகவும் போலியாகவும், வெறுமையாகவுமே உள்ளன.

கொரோனா வைரஸால் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மாநில அரசுகளின் நிதி நிலைமையானது, மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், மத்திய அரசோ, சிரிப்பினை வரவழைக்கும் கட்டுப்பாடுகளை விதித்து, விளையாடி வருகின்றது. அதன் மரியாதையை அதுவேக் குறைத்துக் கொள்கின்றது.

மாநில அரசுகளான நாங்கள் உங்களிடம் பண உதவிக் கேட்டால், நீங்கள் எங்களைப் பிச்சைக்காரர்கள் போல நினைக்கின்றீர்கள். இது மிகவும் வேதனையானது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில அரசுகளைக் கட்டுப்படுத்த நினைப்பதும், மிகவும் வருந்தத் தக்கதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS